1. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
2. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
3. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
4. அகல உழுகிறதை விட ஆழ உழு.
5. அகல் வட்டம் பகல் மழை.
6. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
7. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
8. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
9. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
10.அடக்கமே பெண்ணுக்கு அழகு.
11.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
12.அடாது செய்தவன் படாது படுவான்.
13.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
14.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
15.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
16.அடியாத மாடு படியாது.
17.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
18.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
19.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
20.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
21.அந்தி மழை அழுதாலும் விடாது.
22.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
23.அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
24.அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
25. ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
26. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
27. இக்கரைக்கு அக்கரை பச்சை.
28. இனம் இனத்தையே சாரும்.
29. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
30. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
31. ஈர நாவிற்கு எலும்பில்லை.
32. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
33. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
34. உளவு இல்லாமல் களவு இல்லை.
35. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
36. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
37. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
38. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
39. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
40. எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
41. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
42. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
43. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
44. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
45. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
46. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
47. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
48. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
49. எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
50. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
51. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
52. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
53. எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
54. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
55. எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
56. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
57. எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
58. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
59. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
60. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
61. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
62. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
63. கடுகு சிறுத்தாலும் காரம் குறைய
64. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
65. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
66. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
67. கரும்பு தின்னக் கூலியா?
68. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
69. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
70. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
71. காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
72. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
73. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
74. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
75. குடல் காய்ந்தால் குதிரைய
76. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
77. குரைக்கிற நாய் கடிக்காது.
78. கெண்டையைப் போட்டு வராலை இழு.
79. கெடுவான் கேடு நினைப்பான்.
80. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
81. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
82. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
83. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
84. கையாளாத ஆய 85. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
86. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
87. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
88. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
89. சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
90. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
91. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
92. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
93. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
94. சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
95. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
96. தன் கையே தனக்கு உதவி.
97. தன் முதுகு தனக்கு உதவி.
98. தன் வினை தன்னைச் சுடும்.
99. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
100. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
101. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
102. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
103. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
104. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
105. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
106. துணை போனாலும் பிணை போகாதே.
107. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
108. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
109. தூங்குகிற பசு பால் கறக்காது.
113. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
114. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
115. நிறைகுடம் நீர் தளும்பாது.
116. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
117. நிறை குடம் நீர் தளும்பாது.
118. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
119. நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
120. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
121. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
122. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
123. பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
124. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
125. பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
126. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
127. பக்கச் சொல் பதினாயிரம்.
128. பசியுள்ளவன் ருசி அறியான்.
129. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
130. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
131. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
132. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
133. படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
134. படையிருந்தால் அரணில்லை.
135. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
136. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
137. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
138. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
139. பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
140. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
141. பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
142. பணம் பத்தும் செய்யும்.
143. பணம் உண்டானால் மணம் உண்டு.
144. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
145. பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
146. பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
147. பதறாத காரியம் சிதறாது.
148. பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
149. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
150. பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
151. பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
152. பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
153. பருவத்தே பயிர் செய்.
154. பல துளி பெருவெள்ளம்.
155. பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
156. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
157. பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
158. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
159. பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
160. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
161. பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
162. விளையாட்டு வினையாயிற்று.
163. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
164. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். 165. வெறுங்கை முழம் போடுமா?
166. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
167. வெறுங்கை முழம் போடுமா?
168. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
169. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
170. பெண் என்றால் பேயும் இரங்கும்.
171. பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
172. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
173. பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
174. பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
175. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
176. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
177. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
178. பேசப் பேச மாசு அறும்.
179. பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
180. பேராசை பெருநட்டம்.
181. பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
182. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
183. புத்திமான் பலவான்.
184. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
185. புயலுக்குப் பின்னே அமைதி.
186. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
187. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
188. பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
189. பூ விற்ற காசு மணக்குமா?
190. பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
191. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
192. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
193. நித்திய கண்டம் பூரண ஆயிசு.
194. நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
195. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
196. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
197. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
198. நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
199. நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
200. நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
201. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
202. நீர் மேல் எழுத்து போல்.
203. நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
204. நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.